சமாதானத்துக்காக சண்டை செய்தாராம் மஹிந்த!

Date:

தான் சமாதானத்திற்காகவே யுத்தம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று (20) காலை படைவீரர் நினைவுச் சின்னத்திற்கு அருகில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் படைவீரர் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார்.

தான் இந்த நினைவு நிகழ்வில் கடமையை நிறைவேற்றுவதற்காக மட்டுமே பங்கேற்றதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இன்று நாங்கள் கடமையை நிறைவேற்றுவதற்காக வந்தோம். ஆம், சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தோம். யாரையும் பிடிப்பதற்காக அல்ல. நாட்டைப் பாதுகாப்பதற்காகவே யுத்தம் செய்தோம். எதிர்காலத்தில் இவை மீண்டும் நடைபெறுமா? இல்லையா? என்பதைச் சொல்ல முடியாது. அது வரும் அரசாங்கங்களைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும். யுத்தம் என்பது ஒரு துயரச் சம்பவம். ஆனால், எங்கள் இராணுவம் வெற்றி பெற்றது. யுத்தத்தில் ஒரு தரப்பு வெற்றி பெற வேண்டும் தானே.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மத்தியகுழு கூட்டத்தில் வெடித்த சுமந்திரன்- சிறிதரன் மோதல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும்...

கள்ளக்காதலனுடன் இணைந்து தாயைக் கொன்ற மகள்

திரப்பனை நகர எல்லைக்குட்பட்ட அத்துங்கம சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு வீட்டில்...

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்