பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பு

Date:

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ஒட்டுமொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், குற்றவாளிகள் 30 நாட்களுக்குள் மேல் முறையீட்டுக்குச் செல்லும் வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுரேந்திரமோகன் தெரிவித்தார்.

வழக்கும், தீர்ப்பும்: கோவையை அடுத்த பொள்ளாச்சியில் இளம் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கடந்த 2019 பிப்ரவரி மாதம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் துறையில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், பாபு, ஹேரன்பால், அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் 48 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கில் லேப்டாப், செல்போன், மெமரிகார்டு, கார் உள்ளிட்ட 30 எலக்ட்ரானிக்ஸ் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றப்பத்திரிகை 390 பக்கங்கள் என வழக்கு விசாரணை ஆவணங்கள் மொத்தம் 1,500 பக்கங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்திய தண்டனை சட்ட பிரிவில் 120பி, 366, 342, 354 (ஏ), 354 (பி), 376 (டி), 376 (2) (என்), 509 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம், தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்ட பிரிவு 4 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அரசு தரப்பில் சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் சுரேந்திரமோகன், எதிர்தரப்பில் வழக்கறிஞர் பாண்டிராஜ் ஆகியோர் ஆஜராகினர்.

அண்மையில் கைதான 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதி நந்தினிதேவி, சாட்சி விசாரணை குறித்து தனித்தனியாக சுமார் 50 கேள்விகளை கேட்டார்.

தொடர்ந்து எதிர்தரப்பு சாட்சி விசாரணைக்காக பொள்ளாச்சி நகர சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவரிடம் விசாரணை நடைபெற்றது. வழக்கில் அரசு மற்றும் எதிர்தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு மே 13-ம் தேதி வழங்கப்படும் என மகளிர் நீதிமன்றம் அறிவித்தது.

9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்: அதன்படி, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி இன்று (மே.13) தீர்ப்பு வழங்கினார். 9 பேருக்குமான தண்டனை விவரம் மதியம் அறிவிக்கப்படும் என்றார். அதன்படி பகல் 12.50 மணியளவில் தண்டனை விவரம் வெளியானது.

அதன்படி, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ஒட்டுமொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரூ.110 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹாஷ்...

இலங்கை கடவுச்சீட்டுக்கு தரவரிசையில் 93வது இடம்

2026-ல், ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 93-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது....

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர்

சோமாலியக் கடற்கரைக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த, 17 பணியாளர்களுடன் இருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்