உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைக்க தேசிய மக்கள் சக்திக்கோ, தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஆதரவளிப்பதில்லையென ஈ.பி.டி.பி தெரிவித்துள்ளது.
இவை தவிர்ந்த ஏனைய தரப்புக்கள் ஆட்சியமைக்க தம்மை அணுகினால், அதை சாதகமாக பரிசீலிக்க தயாராக இருப்பதாகவும், இல்லாத பட்சத்தில் எதிர்தரப்பாக செயற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று ஈ.பி.டி.பியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, கட்சியின் பிரமுகர்கள் மற்றும் உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர்களை சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார்.
இதன்போது, உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் கட்சிக்கு சார்பாக இல்லையென தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



