கல்கிசை துப்பாக்கிச்சூடு: கொல்லப்பட்ட நிம்மியின் மகனும் சிறையிலிருந்தவர்!

Date:

மவுண்ட் லவனியாவின் கடற்கரை வீதி பகுதியில் இன்று (05) காலை நடந்த துப்பாக்கிச் சூடு, போதைப்பொருள் கடத்தல்காரர்களின் இரண்டு குழுக்களுக்கு இடையேயான மோதலின் விளைவாகும் என்று பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் நகரசபை துப்புரவு ஊழியராகப் பணியாற்றிய பிரவீன் நிசங்க என்ற 19 வயது இளைஞர் கொல்லப்பட்டார்.

இந்த இளைஞன் இன்று (05) காலை கடற்கரை வீதிக்கான செயிண்ட் சில்வெஸ்டர் குறுக்கு வீதியை துப்புரவு செய்துகொண்டிருந்தபோது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார்.

அப்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் பின்னர் பிரதான வீதியை நோக்கி ஓடியுள்ளார் என்றும், அவரைத் துரத்திச் சென்ற துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கல்கிஸ்ஸை கடற்கரை வீதிக்கு அருகிலுள்ள ஒரு கடையின் மீது மேலும் பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட இளைஞன், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் தற்போது காவலில் உள்ள நிம்மி சுமேத பொன்சேகா என்ற துரியின் மகன் ஆவார். கொலை செய்யப்பட்ட இளைஞன் 2023 ஆம் ஆண்டு போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...

காயங்களுடன் முதியவரின் சடலம்

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர்...

களுவாஞ்சிக்குடியில் மீன்பிடிக்க சென்ற இளைஞனின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்ற 19 வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்