வாழைச்சேனை வைத்தியசாலை தீ விபத்தால் எக்ஸ்ரே சேவை பாதிப்பு!

Date:

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் கதிர் இயக்கவியல் பிரிவில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் கதிர் இயக்கவியல் பொருட்கள் சில தீயில் கருகி சேதமடைந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.

காலைவேளை குறித்த பிரிவில் இருந்து புகை வருவதை அவதானித்த வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், வைத்திய அத்தியட்சகருக்கு தகவல் வழங்கியமையடுத்து, அவர் மட்டக்களப்பு தீயணைப்பு பிரிவினர், மின்சாரசபை மற்றும் பொலிசாருக்கு தகவல் வழங்கியமையினை அடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

மின் ஒழுக்கினால் இவ் விபத்து இடம்பெற்றிருக்கலாம் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல இலத்திரனியல் மின்சாதன பொருட்கள் சேதமடைந்துள்ளன. இதனால் நோயளர்களின் எக்ஸ் ரே படங்கள் எடுக்கும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை நிவர்த்தி செய்ய தற்காலிகமாக ஏறாவூர் மற்றும் காத்தான்குடி வைத்தியசாலைகளில் படங்கள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் எவ்.பி.மதன் தெரிவித்தார்.

-ருத்திரன்-

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...

காயங்களுடன் முதியவரின் சடலம்

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர்...

களுவாஞ்சிக்குடியில் மீன்பிடிக்க சென்ற இளைஞனின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்ற 19 வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்