வடக்கில் 3 மாதங்களுக்குள் உரிமை கோராவிட்டால் 6,000 ஏக்கர் காணி அரசுடைமையாகும்: காணிகளின் முழு விபரம்!

Date:

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகள் 3 மாதங்களுக்குள் ஒருவரும் உரிமை கோராவிட்டால் அரச காணிகளாக பிரகடனப்படுத்தப்படும் என்று 28.03.2025 திகதியிட்ட 2430 இலக்கமிட்ட வர்த்தமானியில்  காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் பிரசுரமாகியுள்ளது.

யாழ் மாவட்டத்தில் 3669 ஏக்கர் காணிகளும், முல்லைமாவட்டத்தில் 702 ஏக்கர் காணிகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 515 ஏக்கர் காணிகளுமாக  5,940 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பு செய்வதற்கான வர்த்தமானி அறித்தல் வெளியாகியுள்ளது.

யாழ் மாவட்டத்தின்மருதங்கேணி பிரதேசசெயலாளர் பிரிவு முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகள், மற்றும் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் வரையான கரையோர பகுதிகளே அரசினால் குறிவைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 54 ஏக்கர் காணியும் அவ்வாறு வர்தமானியிடப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளிலுள்ள அரச நிலம் எது, தனியார் காணிகள் எவை என்பது தெரியாததாலேயே இவ்வாறான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தல் நெருங்கும் சமயத்தில் யாழில் சில வீதிகளை கட்டுப்பாட்டுடனும் மிகச்சிறிய காணிகளையும் பகிரங்கமாக விடுவித்துள்ள ஜேவிபி அரசு, இரகசியமாக ஆயிரக்கணக்கான தமிழர் நிலங்களை சுவீகரிக்க இரகசிய நடவடிக்கையடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரூ.110 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹாஷ்...

இலங்கை கடவுச்சீட்டுக்கு தரவரிசையில் 93வது இடம்

2026-ல், ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 93-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது....

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர்

சோமாலியக் கடற்கரைக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த, 17 பணியாளர்களுடன் இருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்