மஹிந்த பாணியிலேயே அனுர அரசும்!

Date:

காலாகாலமாக ஆட்சிக்கு வரும் அரசுகள் தொழில் சங்கங்களை தமக்கு தேவைக்கேற்ப பயன்படுத்திய பின் தூக்கி வீசிவிடுவது வழமை. ஆனால் தொழில் சங்கங்களின் ஒருமித்த ஆதரவுடன் ஆட்சிப் பீடத்தை பெற்றுக்கொண்ட இன்றைய அனுர தலைமையிலான அரசும் கடந்த கால அரசுகள் போலவே எம்மை தமக்கான பொம்மைகளாக பயன்படுத்த முனைகின்றது என வடமாகண தொழிற் சங்கங்களின் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இவ்வாறான நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது. அனுர அரசு எமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவு செய்து கொடுப்பது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மே தின ஏற்பாடுகள் குறித்து யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு கூறிய குறித்த சங்கத்தின் பிரதிநிதிகள் மேலும் கூறுகையில் –

வடமாகண தொழிற் சங்கங்களின் சம்மேளனம் கடந்த 4 ஆண்டுகளாக மேதினத்தை முன்னெடுத்துள்ளது.

இம்முறை காலச் சூழல் காரணமாக இம்முறை பிரமாண்டமன முறையில் மேதின எழுச்சி பேரணியை முன்னெடுக்க முடியாத நிலை இருப்பதனால் நல்லூர் முன்றலில் இருந்து காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் குதித்த எழுச்சி பேரணியானது ஆரியகுளம் சந்தியை சென்றடைந்து ஸ்ரான்லி வீதியூடாக யாழ் நகரை சென்றடைந்து அதன் பின் யாழ் மாவட்ட செயலகம் சென்றடைந்து YMCA மண்டபத்தில் பேரணி கூட்டம் நடைபெறவுள்ளது.

நாம் இம்முறை 12 தொழில் சங்கங்களின் ஒத்துழைப்புடன் குறித்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம்.

அந்த வகையில் இன்றைய அரசின் இத்தகைய போக்கை சுடிக்காட்டும் வகையில் கோசங்கள் முன்வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்