கடந்த அரசுகளுக்கும் ஜேவிபிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை: ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது!

Date:

அரசியல் தலையீடற்ற ஆட்சியை ஏற்படுத்துவோம் என ஆட்சி அதிகாரத்தை எடுத்துக்கொண்ட இன்றைய அரசும் கடந்தகால ஆட்சியாளர்கள் போன்றே அரசியல் தலையீடுகளை செய்கின்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது

யாழ் ஊடக அமையத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ் மாவட்ட செயலளர் செ.சிவசுதன் இன்றையதினம் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டு இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வெகுஜன அமைப்புகளுடன் இணைந்து உழைப்பளர் தினத்தை கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது

ஆசிரியர் மற்றும் அத்துறைசார் தரப்பினரது ஊதியம் அதிகதிப்பு, கல்வித்துறையில் அரசியல் தலையீடு இருக்க கூடாது, மக்களின் காணி நிலங்கள் விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த மேதின பேரணியானது வரும் 1 ஆம் திகதி முற்பகல் இடம்பெறவுள்ளது.

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த மேதினப் பேரணியானது யாழ் நகரின் பிரதான சாலைகளூடக பேரணியாக சென்று யாழ் பொது நூலகம் முன்பாக ஒன்று கூடி பேரணிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

குறித்த பேரணியில் அனைத்து துறைசார் தரப்பினரும் ஆதரவை வழங்கி குறித்த பேரணியை வலுப்படுத்துவது அவசியம் என்றும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

spot_imgspot_img

More like this
Related

மட்டு சித்தாண்டி முருகன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்யுமாறு கோரி ஆலயத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் 14 வருடங்கள் ஆகியும் கும்பாபிஷேகம்...

கொள்ளை வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகனுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார மற்றும்...

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்