டான் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Date:

நேற்றிரவு (22) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கொலன்னாவ நகரசபை வேட்பாளர் டான் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது,

நேற்றிரவு 9.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் வைத்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொரு நபர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியில் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

ஆரம்பத்தில், காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம், அவர் துப்பாக்கிச் சூட்டில் இறந்துவிட்டதாகவும், டான் பிரியசாத்தின் உடல் பிணவறையில் இருப்பதாகவும் அறிவித்தது. இருப்பினும்,  டான் பிரியசாத் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததாக கொழும்பு தேசிய மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதை தொடர்ந்து, டான் பிரியசாத் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

டான் பிரியசாத் சிங்கள தேசிய அமைப்பின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவராகப் பணியாற்றினார். அவர் உட்பட இளைஞர்களின் பங்களிப்புடன் ஒழுங்கமைக்கப்பட்ட பல சிங்கள தேசியவாத அமைப்புகள், 2016 ஆம் ஆண்டு முதல் கடுமையான முஸ்லிம் எதிர்ப்பு உணர்வைக் கொண்ட பலவந்தமான நடவடிக்கையை எடுக்கும் போக்கைக் காட்டியுள்ளன. இந்த அமைப்புகள் தவறான தகவல்களைப் பரப்புவதற்கும், அச்சத்தைத் தூண்டுவதற்கும், இளைய தலைமுறையினரை வன்முறைச் செயல்களுக்கு இட்டுச் செல்வதற்கும் செயல்பட்டு வருகின்றன, மேலும் அவர்கள் துரோகிகள் என்று முத்திரை குத்திய நபர்களுக்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கையையும் எடுத்துள்ளன. சில சந்தர்ப்பங்களில் அவர்கள் கும்பலாகவும் செயல்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தகைய தேசியவாத அமைப்புகள் உளவுத்துறை நிறுவனங்களுடன் தொடர்புகளைப் பேணி வந்ததாகவும் தகவல்கள் உள்ளன. 2017 ஆம் ஆண்டில் ரோஹிங்கியா அகதிகள் தங்கியிருந்த இடம் உட்பட பல இடங்களுக்குள் அத்துமீறி நுழைந்ததாக டான் பிரியசாத் மீது குற்றம் சாட்டப்பட்டாலும், அவர் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை போன்ற சட்டங்கள் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் நீரிணையில் 3 எண்ணெய் கப்பல்கள் எரிகின்றன: ஈரான் புரட்சிகர காவல்படை

ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல்கள் செல்லும்போது கண்ணிவெடிகளில் மோதியதில்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான யாழ் வாசி பிணையில் விடுதலை!

தமிழகத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து...

ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்