யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகனை கைது செய்ய உத்தரவு!

Date:

குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி விடுவதாக கூறி பணம் பெற்று வந்த பொலிஸ் உயர் அதிகாரியின் மகனை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு, யாழ். நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளது.

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரின் மகன், பொலிஸ் நிலையங்களுடன் வழக்குகளை முடிப்பதாக கூறி பணம் பெற்று வந்தமை தொடர்பில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையில், மகன் தலைமறைவாகி உள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் யாழ் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்த நிலையில், சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துமாறு மன்று பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளது.

அதேவேளை சந்தேக நபரின் தந்தையான பொலிஸ் அதிகாரி முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரூ.110 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹாஷ்...

இலங்கை கடவுச்சீட்டுக்கு தரவரிசையில் 93வது இடம்

2026-ல், ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 93-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது....

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர்

சோமாலியக் கடற்கரைக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த, 17 பணியாளர்களுடன் இருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்