ரெலோவிலிருந்து விலக்கப்பட்ட விந்தன் தமிழரசு கட்சியில் இணைவு!

Date:

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஒழுக்காற்று நடவடிக்கையெடுத்து, கட்சியிலிருந்து நீக்கிய முன்னாள் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் இன்று (11) இலங்கை தமிழ் அரசு கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திடமிருந்து ஆயுள்கால உறுப்பினர் அங்கத்தவத்தை விந்தன் பெற்றுக்கொண்டார்.

அவருடன், அவரது மகனும் தமிழ் அரசு கட்சியில் இணைந்து கொண்டார்.

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தேசிய அமைப்பாளர் சுரேன் குருசாமி ஆகியோர் தொடர்பில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் முன்னதாக விந்தன் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அந்த சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களுக்கான ஆதாரத்தை கட்சி கோரிய போதும், விந்தனால் வழங்க முடியவில்லை. இதையடுத்து, அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.

தன் மீது விந்தன் அவதூறு பரப்பியதாக குறிப்பிட்டு ரெலோ தேசிய அமைப்பாளர் சுரேன் குருசாமி யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் மானநஸ்ட வழக்கு தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...

மட்டக்களப்பில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரூ.17 இலட்சம் பணத்துடன் மாயமான அடகு நிறுவன முகாமையாளர்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும்...

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டிய இளைஞன் கைது!

அம்பாறை திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்