ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கும் இடையிலான ஒப்பந்தம் காரணமாகவே முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படாமலுள்ளதற்கு காரணம் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார்.
ஹோமகமவில் நடந்த ஒரு கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.
டிரான் அலஸ் என்ன மோசடி செய்தாலும் அல்லது கொலை செய்தாலும் அவருக்கு எதிராக அனுர குமார எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்று அவர் கூறினார்.
“தேசபந்து ஏன் கைது செய்யப்படவில்லை? டிரான் அலஸ் அவருக்குப் பின்னால் இருக்கிறார். அனுர குமார, டிரான் அலஸ் என்ன மோசடி செய்தாலும், ஒருவேளை ஈ விசா அல்லது ஈ-பாஸ்போர்ட் அல்லது அவர் எந்தவொரு கொலை செய்தாலும் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார். அதுதான் அவரது ஒப்பந்தம்,” என்று அவர் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1