கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தை தரமுயர்த்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
திருகோணமலை கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (25) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தங்களுக்கான விடுதி வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் எனவும், கல்விச் சூழலை மேம்படுத்த வேண்டிய தேவையும் மாணவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.
பல்கலைக்கழக ஊழியர்களை வீட்டிற்கு செல்லவிடாது இடைமறித்து மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இதனால் இவர்களுக்கிடையே முரண்பாடான நிலைமை நிலவிவருகிறது.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் கோணேசபுரி ஊடாக நிலாவெளி பிரதான வீதியில் தொடர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல தரப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.