‘வேலை முடிந்தது’; செவ்வந்தியின் குறுந்தகவல்: தம்பியை 24 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

Date:

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரதான சந்தேகநபரான, செவ்வந்தி என்ற இளம்பெண், தனது சகோதரருடன் கைத்தொலைபேசியில் குறுந்தகவல் மூலம் தொடர்பில் இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

நீதிமன்றத்துக்குள் சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், சட்டத்தரணி வேடத்தில் தப்பியோடிக்கொண்டிருந்த செவ்வந்தி, தனது சகோதரனுக்கு ‘வேலை முடிந்தது’ என அவரது சகோதரருக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19ஆம் திகதி புதுக்கடை நீதிமன்றத்துக்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். சட்டத்தரணி வேடத்தில் நுழைந்த துப்பாக்கிச் சூட்டாளருக்கு, சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றத்துக்குள் நுழைந்த செவ்வந்தி துப்பாக்கியை வழங்கியிருந்தார்.

துப்பாக்கிச்சூட்டாளர் கைது செய்யப்பட்டுள்ள போதும். செவ்வந்தி இதுவரை பொலிசாரிடம் சிக்கவில்லை.

தலைமறைவாகியுள்ள செவ்வந்தி, தனது தம்பியுடன் குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொண்டு வந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சர்ச்சைக்குரிய கொலைக்குப் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அல்ல, மாறாக செவ்வந்திதான் என்றும் பெலிசார் தெரிவித்துள்ளனர்.

செவ்வந்தியை கைது செய்ய முடியாத நிலையில், அவரது தாயாரையும், சகோதரரையும் பொலிசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தி, 24 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த அனுமதி பெற்றுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் புதிய மனு

பிரச்​சா​ரத்​தின்​போது தனது ​படத்தை பயன்​படுத்​த தடை கோரி பாமக நிறு​வனர் ராம​தாஸ்...

இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம்; செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் திருப்பித்தர ஒப்புக்கொண்டது: ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கைப்...

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்