பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் புதிய மனு

Date:

பிரச்​சா​ரத்​தின்​போது தனது ​படத்தை பயன்​படுத்​த தடை கோரி பாமக நிறு​வனர் ராம​தாஸ் தாக்​கல் செய்​துள்ள புதிய மனுவுக்​கு, அன்​புமணி தரப்​பு வேட்​பாளர்​கள் பதிலளிக்க சென்னை உரிமை​யியல் நீதி​மன்​றம் நோட்​டீஸ் பிறப்​பித்துள்​ளது.

பாமக​வின் பெயர், கொடி, சின்​னத்தை பயன்​படுத்​தக்​கூ​டாது என அன்​புமணி தரப்​புக்கு தடை விதிக்​கக் கோரி​யும், கட்​சி​யின் தலை​வ​ராக தன்னை அறிவிக்​கக் கோரி​யும் ராம​தாஸ் தரப்​பில் ஏற்​கெனவே சென்னை பெருநகர உரிமை​யியல் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்டு பிர​தான வழக்கு நிலு​வை​யில் உள்​ளது. இந்த வழக்​கில் இதுதொடர்​பாக தடைகோரி ராம​தாஸ் தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட இடைக்​கால மனுக்​களை ஏற்​கெனவே நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்ளது.

இந்​நிலை​யில் ராம​தாஸ் தரப்​பில், சென்னை 13-வது பெருநகர உரிமை​யியல் நீதி​மன்​றத்​தில் புதி​தாக தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள மனு​வில், “அன்​புமணி ஏற்​கெனவே பாமக​வில் இருந்து நீக்​கப்​பட்டு விட்​டார். அவருக்​கும் பாமக​வுக்​கும் எந்​தத் தொடர்​பும் கிடை​யாது. அவர் சட்​ட​விரோத​மாக பாமக​வின் தலை​வ​ராக நீடித்து வரு​கிறார். இதுதொடர்​பான வழக்கு இதே நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளது.

இந்​நிலை​யில் தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் எனது புகைப்​படத்தை பயன்​படுத்தி வாக்கு சேகரிப்​பில் ஈடு​படக்​கூ​டாது என அன்​புமணி தரப்​பில் போட்​டி​யிடும் 18 வேட்​பாளர்​களுக்​கும் தடை விதிக்க வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார்.

இந்த மனுவை விசா​ரித்த நீதிபதி தர்​மபிரபு, இதுதொடர்​பாக அன்​புமணி தரப்​பில் போட்​டி​யிடும் 18 வேட்​பாளர்​களும் பதிலளிக்க நோட்​டீஸ் பிறப்​பித்து விசா​ரணையை ஏப்​.21-க்கு தள்​ளி​வைத்​தார்.

spot_imgspot_img

More like this
Related

சிஐடியினர் அநுராதபுரம் சென்றால் முழு திருடர்களையும் ஒரே மேடையில் பிடித்திருக்கலாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன தலைமையிலான பேரணியையும் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்த...

வடக்கு, கிழக்கில் மழைக்கு வாய்ப்பு

எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் இடியுடன் கூடிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்