யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் மகன் பயணித்த வாகனம், கடந்த 23ஆம் திகதி யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் கந்தர்மடம் சந்திக்கு அருகே விபத்துக்குள்ளானது. இதில் அரச அதிபரின் மகனும், அவரது நண்பரும் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவத்தை அடுத்து, அரச அதிபரின் மனைவி ஒரு முகநூல் பதிவை வெளியிட்டு, இந்நிகழ்வின் உண்மையை விளக்கி உள்ளார். அவர் கூறியதாவது:
“மாவட்ட செயலாளரின் மகன், அரச வாகனத்தில் பயணிக்கவில்லை. அவர் தனது நண்பர்களுடன் சொந்த வாகனத்தில் பயணித்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. வாகனம் ஓட்டினது மதுபோதையில் இல்லாமல், அது steering track ஆன நிலையில் மரத்தோடு மோதி நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் அவர் மற்றும் அவருடைய நண்பர்கள் உயிரிழப்பதற்கு ஆபத்தாக இல்லாமல், இறை அருளால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.”
அவர் மேலும், “பல்வேறு சமூக ஊடகங்களில் மறைமுகமான கருத்துக்கள் மற்றும் தவறான தகவல்களை வெளியிடப்பட்டுள்ளன. ஊடகங்கள் சுருக்கமாக, விரைவில் செய்திகளை வெளியிடுவது என்பதில் உண்மையை தவிர்த்து, தனிப்பட்ட விரோதங்களோ அல்லது காழ்ப்புணர்ச்சியினாலோ செய்திகளை வழங்குவது மனவருத்தம் அளிக்கின்றது,” என குறிப்பிட்டார்.
மேலும், அவர்கள் பாடசாலை பழைய மாணவர் சங்க கூட்டத்திற்க்கே சென்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது,ம், உண்மை செய்திகளை வழங்குவதும் அவசியமானது. எனினும், உண்மையை வெளிப்படுத்திய ஊடகங்களுக்
கும், ஆறுதல் வார்த்தைகளை கூறிய அன்பினருக்கும் தனது மனமார்ந்த நன்றியையும் அவர் தெரிவித்து உள்ளார்.