Pagetamil
இலங்கை

துப்பாக்கி சூட்டு சம்பவ நபரை கண்டுபிடிக்க பொலிஸ் உதவி கோரல்

அம்பலாங்கொட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 10ம் திகதி, காலி-கொழும்பு பிரதான வீதியில் உள்ள உரவத்தை பகுதியில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண், பெண் இருவரும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், படபொல பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, தேடப்பட்டுவரும் இந்த சந்தேக நபரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக 071-8591484 அல்லது 091-2291095 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

5 வருடங்களின் பின் பேஸ்புக்கால் சிக்கிய பொலிஸ் திருடன்!

Pagetamil

ஏப்ரல் 3 -10 வரை வடக்கு, கிழக்கில் மழைக்கு வாய்ப்பு: மற்றொரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகிறது!

Pagetamil

பிரித்தானியாவின் தடையால் கொதிக்கும் ஜேவிபி அரசு

Pagetamil

யாழில் அதிக போதையால் உயிரிழந்த இளைஞன்!

Pagetamil

வியாழேந்திரன் விளக்கமறியலில்!

Pagetamil

Leave a Comment