காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி கோவில் குளத்தில் தந்தை ஒருவர் தனது புண் (சிரங்கை) தோண்டி தனது மகளான ஒரு வயதுடைய சிறுமிக்கு சாப்பிடக் கொடுத்த போதைப்பொருளுக்கு அடிமையாகிய 24 வயதுடைய தந்தையை 2300 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் நேற்று புதன்கிழமை (29) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்
குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் சம்ப தினமான நேற்று இரவு 8.00 மணியளவில் இளம் குடும்பம் ஒன்றின் போதைக்கு அடிமையாகிய கணவன் அவரது மகளான ஒரு வயதுடைய குழந்தைக்கு அவரது புண்ணை தோண்டி சாப்பிடக் கொடுத்துள்ளார். இதை கண்ட மனைவி அலரிக் கொட்டையை உட்கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்த போது அயலவர்கள் கண்டு அவரை காப்பாற்றி சிறுவர் மகளிர் தொடர்பான அவசர 1929 இலக்கத்துக்கு அழைத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி உப பரிசோதகர் த. ரஜினிகாந்த் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சென்று குறித்த வீட்டை முற்றுகையிட்டு சிறுமியை சித்திரவதை செய்த தந்தையை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 2300 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளை மீட்டனர்
இதில் கைது செய்யப்பட்டவரை வைத்திய பரிசோதனைக்கு பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-கனகராஜா சரவணன்-



