இலங்கை முழுவதும் வாழும் கலைஞர்களை ஒன்றிணைத்து கலைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் மத்திய குழுக் கூட்டம் இன்றைய தினம் (16) திருகோணமலை தளம் அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் இடம் பெற்றது.
இதன்போது இலங்கையின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து கலைஞர்கள் வருகை தந்து பங்கு கொண்டனர்.
ஒன்றியத்தின் தலைவர் வைத்திய கலாநிதி சிவசுதன், செயலாளர் அன்பரசன் உட்பட உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, திருகோணமலை பிராந்தியத்திற்கான கலைஞர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது. இதன் போது திருகோணமலையை சேர்ந்த கலைஞர்கள் பங்கு கொண்டிருந்தனர்.


What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1