பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் மோதல் CCTV காட்சிகள்

Date:

[embedyt] https://www.youtube.com/watch?v=yMsU50KhAc0[/embedyt]

யாழ்பாணம் தனியார் உணவகம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் இருவரிடையே இடம்பெற்ற மோதல் காட்சிகள் வெளியாகி உள்ளன.

கைகலப்பில் ஒருவர் படுகாயமடைந்து தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தியின் தகவலின்படி, குறித்த நபர் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கிடைத்த தகவலின்படி, யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, அங்கு காணொளி பதிவில் ஈடுபட்டிருந்தார். இதற்கிடையில், அங்கு இருந்த நபர் தன்னை காணொளி பதிவு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். எனினும், அர்ச்சுனா அதன் மீறி காணொளி பதிவை தொடர்ந்து மேற்கொண்டுள்ளார்.

இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முறுகி, அது கைகலப்பாக மாறியது. இந்த தகராறு காரணமாக குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்திற்குப் பின்னர், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மருத்துவமனையின் தகவலின்படி, அவருக்கு மேலும் சிகிச்சை தேவையுள்ளதாகவும், அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

spot_imgspot_img

More like this
Related

பாடசாலைக்கால காதலர்களின் உடல் ஒன்றாக அடக்கம்

ஹெனேகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம்ஜோடி உயிரிழந்துள்ளது. கடந்த 9ஆம் திகதி இந்த...

மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்து ஓட்டுநருக்கு விளக்கமறியல்

கெஸ்பேவ-கொழும்பு வீதியில் உள்ள மிரிஸ்வத்த பகுதியில் 'மெட்ரோ' (Metro) பேருந்துடன் வேண்டுமென்றே...

பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்