லெபனானில் ஹிஸ்புல்லாவை தாக்கியது சார்பில் அமெரிக்கா – இஸ்ரேல் புகழாரம்

Date:

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ‘கோல்டன் பேஜர்’ (Golden Pager) எனப்படும் சிறப்பு பரிசை வழங்கியுள்ளார். இந்நிகழ்வு, நெதன்யாகுவின் அமெரிக்கா விஜயத்தின் போது நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு, லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினை குறிவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட ‘பேஜர்’ தாக்குதலை நினைவுகூரும் வகையில், வெட்டப்பட்ட மரத்தின் மேல் வைத்துப் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ‘கோல்டன் பேஜர்’ ட்ரம்புக்கு வழங்கப்பட்டது. இதன்போது, “எங்களின் தலைசிறந்த நண்பர் மற்றும் சிறந்த கூட்டாளியுமான ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்புக்கு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு” என அந்தப் பரிசில் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்த பரிசை பெற்றுக்கொண்ட ட்ரம்ப், “இது ஒரு சிறந்த தாக்குதல்” எனக் கூறி, இஸ்ரேல் மேற்கொண்ட லெபனான் தாக்குதலை பாராட்டியதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ட்ரம்ப் தரப்பில் இருந்து நெதன்யாகுவிற்கு ஒரு பிரத்தியேக புகைப்படம் பரிசளிக்கப்பட்டுள்ளது. அதில், “சிறந்த தலைவர்” என எழுதியிருந்ததுடன், ட்ரம்பும், நெதன்யாகுவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...

அதிமுகவில் பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவி பறிப்பு

அதிமுகவில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகளை...

முள்ளிவாய்க்கால் அவலம்: 17 வருடங்களின் பின் மே மாதத்தில் மஹிந்த குடும்பம் கண்ணீர் விடுகிறது!

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் போது தமிழ் மக்கள் விட்ட கண்ணீர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்