குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் கைது!

Date:

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 12.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, அவர் தனது உடமைகளுடன் சாக்லெட் பொதிகள் போல் பொதி செய்து இந்த போதைப்பொருளை கடத்த முயன்றமை தெரியவந்ததுள்ளது.

கைது செய்யப்பட்டவர் இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த 45 வயதான வியாபாரி என்பதுடன், அவரிடம் இருந்து 1 கிலோ 40 கிராம் குஷ் ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்