விட்டமின் மருந்துகளால் ஒவ்வாமை : 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Date:

அனுராதபுரம் சீவலக்குளம், குட்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள ஒரு பாடசாலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விட்டமின் மருந்துகளை உட்கொண்டதை தொடர்ந்து ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 15 மாணவர்கள் இன்று (05) அனுராதபுரம் பயிரிமடு பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் 6ம் மற்றும் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு விட்டமின் மருந்துகள் வழங்கப்பட்டதாகவும், அவற்றை உட்கொண்ட பின்னர் சில மாணவர்களுக்கு வயிற்று வலி உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது.

மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் மாணவர்களின் உடல்நிலையில் எந்தவொரு ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதுடன், அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சீவலக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்