பாடசாலை மாணவர்களுக்காக காலணிகளை கொள்வனவு செய்ய வழங்கப்படும் வவுச்சர்கள் நாளை (05.02.2025) வரை விநியோகிக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மாணவர்கள் அவர்களின் கல்விச் செலவுகளை நிரப்புவதற்காக இந்த உதவி திட்டம் வழங்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன், பாடசாலை புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக ரூ.6000 மதிப்புள்ள கொடுப்பனவு நாளை (05.02.2025) வழங்கப்படவுள்ளது.
கல்வி தொடர்பான இத்தகைய நலத்திட்டங்கள், மாணவர்கள் கல்வியில் தொடர தகுந்த ஆதரவாக அமையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1