இன்றைய தினம் ( 4) திருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்ட தியாகி நடராஜன் அவர்களின் நினைவு தினமாகும்.
1957ம் ஆண்டு பிப்ரவரி 4ம் திகதி, இலங்கையின் 9வது சுதந்திர தினத்தன்று, தனிச் சிங்கள சட்டத்தை எதிர்த்து ஈழத் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்றைய தினம், திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்தின் மேல் ஏறி சிங்கக் கொடியை அகற்றி கருப்பு கொடியை ஏற்ற முயன்ற 22 வயதுடைய இளைஞர் தியாகி நடராஜன் அவர்கள், காவல் அதிகாரி எவ். ஜி. மனுவல். டீ. சில்வா என்பவரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்தார்.
இச்சம்பவம் ஈழத் தமிழர்களின் எதிர்ப்பை உலகறிய செய்த முக்கியமான நிகழ்வாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1