அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து

Date:

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று கட்டிடங்கள் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி, நேற்று, வெள்ளிக்கிழமை (31) மாலை இந்த விமான விபத்து நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவில் பிலடெல்பியாவில் சிறிய ரக விமானம் கீழே விழுந்து பல வீடுகள் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 6 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. உயிரிழப்புகள் குறித்து தகவல் ஏதுவும் வெளியாகவில்லை.

குறித்த விபத்து, பரபரப்பான சாலையில் ஏற்பட்ட விமான விபத்தாகையால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த புதன்கிழமை தலைநகர் வாஷிங்டனில் நடுவானில் இராணுவ ஹெலிகாப்டர், விமானம் மோதி 67 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த ஓரிரு தினங்களில் மீண்டும் விமான விபத்து நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் அன்வர் எம். முஸ்தபா சந்திப்பு: கிழக்கின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டாக்டர் நய்யார் நசீர்...

காரைதீவு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம்

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “உள்ளூராட்சி வாரம்...

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்