இன்று (01.02.2025 சனிக்கிழமை) திருகோணமலை, இறக்கக்கண்டியில் இலவச மருத்துவ சேவையும் Sugar மற்றும் Pressure பரிசோதனைகளும் நடைபெறுகின்றன.
காலை 8.00 மணி முதல் மாலை 03 மணி வரை இவ் இலவச மருத்துவ முகாம், இறக்கக்கண்டி தி/அல்ஹம்ரா மு.ம.வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கிண்ணியாவில் இயங்கிவரும் சமூக சேவைகள் நிறுவனமான அல்ஹிக்மத்துல் உம்மா பௌன்டேஷனின் அணுசரனையில் நடைபெறும் இவ் இலவச முகாமில் பொதுமக்கள் தமது அடையாள அட்டையுடன் வருகை தந்து குறித்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர்.




