25.6 C
Jaffna
March 1, 2025
Pagetamil
இலங்கை

வடக்கில் பொதுப்போக்குவரத்து பேருந்துகளில் இனி பயணச்சிட்டை கட்டாயம்!

வடக்கு மாகாணத்தில் 01.02.2025 முதல், நீண்டதூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பயணிகளுக்கு பிரயாணசிட்டை வழங்கப்படவேண்டும். அதேபோன்று உள்ளூர் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் 01.03.2025 ஆம் திகதிக்கு முன்னர் பயணச்சிட்டைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் திடீர் பரிசோதக உத்தியோகத்தர்கள் ஊடாக சோதனைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்கள் தாங்கள் செலுத்தும் கட்டணங்களின் மீதிப்பணம் தரப்படுவதில்லை எனவும், கூடுதலான கட்டணம் அறவிடப்படுவதாகவும் முறைப்பாடுகள் முன்வைத்தமையை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் – கஜேந்திரகுமார்

Pagetamil

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

Pagetamil

இனிய கற்பனை: எப்போது திகட்டும் என்.பி.பி?

Pagetamil

ப்ளூமெண்டல் ரயில் கடவை நாளை பூட்டு

Pagetamil

புதிய வாகனங்கள் அடுத்த வாரம் முதல் விற்பனை

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!