பெலியத்த, நிஹலுவவில் அமைந்துள்ள கல்கேம கோவிலிலிருந்து நேற்று (28) மேலும் இரண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெலியத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், இதுவரை கோவிலிலிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டுகளின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து கைக்குண்டுகளும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட உயிருள்ள குண்டுகளாகும். சமீபத்தில், கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு கிணற்றை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, அதிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கைக்குண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, பொலிஸார் மேலும் இரண்டு கைக்குண்டுகளைக் கண்டுபிடித்ததுடன் தொடர் தேடுதல்களின்போது, மேலும் இரண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1