“வாடகை மனைவி” முறை உள்ள ஊர்

Date:

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில், சிவபுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பல ஆண்டுகளாக ஒரு வினோதமான பின்பற்றப்பட்டுவரும் நடைமுறை பிரபலமாக உள்ளது.

இந் நடைமுறையை ‘தாதிச்சா பிரதா’ என்று அழைக்கின்றனர். அதாவது, இந்த முறையில், ஆண்கள் ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை பெண்களை வாடகைக்கு மனைவிகளாகத் தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்த நடைமுறை பல தசாப்தங்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் படி, திருமணம் செய்ய பெண்ணைப் பெற முடியாத பணக்கார ஆண்கள், பெண்களை வாடகை மனைவிகளாக வாங்கி, அவர்களுடன் குறிப்பிட்ட கால அவகாசம் முழுவதும் வாழ்க்கை நடத்துவார்கள்.

இந்த நடைமுறை மிகுந்த ஆபத்தையும் சிக்கலையும் ஏற்படுத்துவதாய் இருந்தாலும், இதுவரையில் புகார் ஏதும் வராததால், குறித்த நடைமுறையை பின்பற்றுவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாதிச்சா பிரதா எனப்படும் இந்த நடைமுறையில் பெண்களை, குறிப்பாக, ஏலத்தில் 8 முதல் 15 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக லீகல் சர்வீசஸ் இந்தியா அறிக்கை தெரிவித்துள்ளது. இதன் மூலம், ரூ. 15,000 முதல் 25,000 வரை பணம் பெற்றுக் கொள்ள முடிகின்றது. மேலும், அழகான பெண்களுக்கு ரூ. 2 லட்சம் வரைக்கும் பணம் வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஏலம் விடும் பெண்களுக்கும் ஏலத்தில் எடுக்கும் ஆண்களுக்கும் இடையே ரூ.10-ல் தொடங்கி ரூ.100 வரையிலான பத்திரத்தில் ஒப்பந்தம் போடப்படுகிறது. இந்த ஒப்பந்த கால அளவை பெண்கள் புதுப்பித்துக்கொள்ள முடியும்.

வறுமை, வரதட்சணை கொடுமை மற்றும் பிற சமூகப் பிரச்சினைகள் இந்த நடைமுறைக்கு காரணமாக கூறப்படுகின்றன. ஆனால், இந்த முறையை பின்பற்றும் பெண்கள் பல நேரங்களிலும் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர்.

எனினும், இந்த நடைமுறை, மத்திய பிரதேச காவல்துறைக்கு தெரிந்திருந்தாலும், யாரும் புகார் செய்யாததால், இதற்கு சட்ட ரீதியான தடுப்பு இருக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால், இந்த முறையை நிறுத்துவதற்கு ஒரு புறம்பான நடவடிக்கைகள் எடுக்கப்படாதுள்ளதால், இது தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் நடைமுறையில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...

ஹோர்முஸில் அமெரிக்காவின் சுங்கக்கட்டணம் மட்டுமே இருக்கலாம்!

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையாளர்கள் முடிக்கத் தவறினால், முக்கியத்துவம்...

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது ஈரான்

தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்து, முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்