மட்டக்களப்பில் யானை தாக்குதல் – பஸ் சேதம், பயணிகள் பாதுகாப்பில்

Date:

மட்டக்களப்பு ஓட்டமாவடி தியாவட்டவான் பகுதியில் வைத்து யானை ஒன்று பஸ் வண்டியை தாக்கியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கி, கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்த தனியார் பஸ் வண்டி மீதே இத்தாக்குதல் நேற்று இரவு (28)மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக் குறித்த தாக்குதலில் பஸ் வண்டி சேதத்திற்குள்ளாக்கப்பட்டிருந்தாலும், இதன் போது பஸ் வண்டியில் பயணித்த எவருக்கும் சேதங்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கி பயணித்து கொண்டியிருக்கையில் குறித்த பஸ் ஓட்டுநர் தியாவட்டவான் பகுதியில் யானை கூட்டத்தினை கண்டதும் பஸ் வண்டியினை நிறுத்தியுள்ளார் அதன்போதே யானை பஸ் வண்டியின் முன் பக்கம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் புரியும் யானைகளை காட்டுப் பகுதிக்குள் விரட்டும் செயற்பாடுகளில் கல்குடா அனர்த்த அவசர உதவிச்சேவை குழுவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயற்பட்டு வருகின்றன

spot_imgspot_img

More like this
Related

திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

ரத்தனபிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த திருடன் ஒருவன், உள்ளே...

ஹோர்முஸைத் திறக்கும் திட்டம் குறித்து அமெரிக்காவின் பதில் செவ்வாய்க்கிழமை வரும் – ஈரான் வெளியுறவு அமைச்சர்

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்த தெஹ்ரானின் முன்மொழிவுக்கு, அமெரிக்காவிடமிருந்து செவ்வாய்க்கிழமையன்று அதிகாரப்பூர்வமான...

அரச வாகனத்தை பயன்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பௌசிக்கு ரூ.66 இலட்சம் அபராதம்!

அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் அனர்த்த முகாமைத்துவ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்