புனரமைக்கப்பட்ட நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று (25.01.2024) வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த முக்கிய நிகழ்வு இளங்கலைஞர் மன்றத்தலைவரும் வடக்கு மாகாண அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தலைமையில் கொண்டாடப்பட்டது.
விழாவின் முன்பாக, இளங்கலைஞர் மன்றத்திற்கு அருகிலுள்ள கொண்டலடி ஞானவைரவர் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, விழாவின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், புதிய கட்டிட தொகுதியை திறந்து வைத்தார்.
இவ்விழாவில் கௌரவ விருந்தினராக சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன், இசைவானர் மு.கண்ணன் உள்ளிட்ட பல முக்கிய நபர்கள்கள் கலந்துகொண்டனர்.
மேலும், இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, ஈழத்தின் புகழ்பூத்த தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் விசேட நாதஸ்வர தவில் கச்சேரியும் நடைபெற்றது.