வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்காக சட்டவிரோத நிறுவனங்களுக்கு பணம் வழங்கும் சம்பவங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் 2024ம் ஆண்டில் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
2023ம் ஆண்டில் 3,675 முறைப்பாடுகள் கிடைத்த நிலையில், 2024ம் ஆண்டில் இது 4,658 முறைப்பாடுகளாக அதிகரித்துள்ளது. இதன் பின்னணியில் சட்டவிரோத நடவடிக்கைகளை முன்னெடுத்த 132 பேர் கைது செய்யப்பட்டு, உரிமம் பெற்ற 14 நிறுவனங்களின் உரிமையாளர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 2024ம் ஆண்டில் இந்த மோசடிகள் தொடர்பாக 900 வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது 2023ம் ஆண்டில் 182 வழக்குகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க உயர்வாகும். மோசடிகள் அதிகரிக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.