ஒரே நாளில் 33 தமிழக மீனவர்கள் கைது

Date:

எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரத்தை சேர்ந்த 18 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே நேற்று நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே கடற்படை கப்பலில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், மேற்கண்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 2 விசைப்படகுகளில் சென்றிருந்த 18 மீனவர்களை சிறைபிடித்துள்ளனர்.

இந் நிலையில், இன்று (26) அதிகாலை மேலும் ஒரு விசைப்படகையும் அதிலிருந்த 15 மீனவர்களையும் சிறைபிடித்துள்ளனர். இலங்கை கடற்படையால் ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 33 பேர் சிறைபிடித்துச் செல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்