ரஷ்யாவில் மாபெரும் ட்ரோன் தாக்குதல்

Date:

உக்ரைன், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ உட்பட 13 பிராந்தியங்களை குறிவைத்து பாரிய ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

சுமார் 121 ஆளில்லா விமானங்கள் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்ட இந்த தாக்குதலில், ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடாத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, மாஸ்கோவில் அமைந்துள்ள எண்ணெய் ஆலையொன்றின் மீது குண்டுகள் வீசப்பட்டு, அந்த ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் பொருளாதார சேதம் ஏற்பட்டதுடன், உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், ரஷ்யாவின் ரியாசான், மாஸ்கோ உள்ளிட்ட 13 பிராந்தியங்களை இலக்காகக் கொண்ட ஆளில்லா விமானங்களை ரஷ்ய இராணுவம் இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாகவும், 121 ட்ரோன்களை அழித்ததாகவும் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல், ரஷ்யா மீது உக்ரைன் மேற்கொண்ட மிகப்பெரிய தாக்குதல் எனும் வகையில் வரலாற்றில் முக்கியமானதாகக் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் புதிய மனு

பிரச்​சா​ரத்​தின்​போது தனது ​படத்தை பயன்​படுத்​த தடை கோரி பாமக நிறு​வனர் ராம​தாஸ்...

இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம்; செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் திருப்பித்தர ஒப்புக்கொண்டது: ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கைப்...

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்