27.6 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

UPDATE: ‘மாமா பணத்தை தராததால் மாணவியை கடத்தினேன்’: மச்சான் கூறிய காரணம்!

கண்டி கெலிஓயா பிரதேசத்தில் பாத்திமா ஹமிரா என்ற 18 வயது பாடசாலை மாணவியை கடத்தி 50 இலட்சம் கப்பம் கோரிய 31 வயதுடைய மொஹமட் நாசர் பாடசாலை மாணவியுடன் ‌அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்த போது ​​கடத்திச் சென்ற நபரையும், குறித்த மாணவியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் ‌தெரிவித்தார்.

நேற்றிரவு (12) அம்பாறை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இருவரும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவியிடம் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

மேலும் தாயின் தம்பியான தனது மாமாவின் மகளையே இவ்வாறு அழைத்து வந்ததாக குறித்த கடத்தலை நடத்திய இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஜப்பானில் பணிபுரிந்ததாகவும், மாமாவிடம் தனது பணம் கொடுக்கப்பட்டதாகவும், பணத்தை தராததால் தான் இதுபோன்ற நடவடிக்கை எடுத்ததாகவும் போலீசார் மேற்கொண்டு விசாரணையில் கூறியுள்ளார்.

இதேவேளை கடத்தப்பட்ட பாடசாலை மாணவி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்.

-பாறூக் ஷிஹான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ். பல்கலை பிரச்சினைக்கு விரைவு நடவடிக்கை – அரசு அறிவிப்பு

east tamil

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முடிவுகளை அரசாங்கம் மேற்கொள்ளும் – அநுர

east tamil

யாழில் 13 இந்திய மீனவர்கள் கைது – கடற்படையின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயம்

east tamil

அரிசி விற்பனையில் கலப்பு!

east tamil

மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

Leave a Comment