நீரோடையில் விழுந்து குழந்தை பலி

Date:

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள போரதீவுப்பற்று பகுதியில் நீரோடையில் விழுந்து ஒன்றரை வயதுடைய ஆண்குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (04) இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

போரதீவுபற்று இளைஞர் விவசாயத்திட்டத்தை சேர்ந்த ஒன்றரை வயதுடைய முருகேசு விகான் என்னும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த நீர் நிலைக்கு அருகிலுள்ள வீடு ஒன்றில் உள்ள குழந்தை நேற்று காலையில் வீட்டில் இருந்து தத்தி தத்தி நடந்து வெளியேறி வீட்டிற்கு அருகிலுள்ள நீரோடை பகுதிக்கு வந்து விளையாடிக்கொண்டிருந்தபோது வாய்க்கால் நீருக்குள் வீழ்ந்து நீரில் மூழ்கியுள்ளது.

இதனையடுத்து குழந்தையை மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொன்று சென்ற நிலையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளது என வைத்தியர்கள் தெரிவித்ததுடன் குழந்தையை பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியவசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...

ஹோர்முஸில் அமெரிக்காவின் சுங்கக்கட்டணம் மட்டுமே இருக்கலாம்!

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையாளர்கள் முடிக்கத் தவறினால், முக்கியத்துவம்...

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது ஈரான்

தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்து, முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்