வேலணை பிரதேச வைத்தியசாலை சிக்கலுக்கு சுமுக தீர்வு: 24 மணித்தியால சேவை தொடரும்!

Date:

வேலணை பிரதேச வைத்தியசாலையில் 24 மணித்தியாலங்களும் வழக்கம் போல நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாண கணக்காய்வு திணைக்களத்தின் நடவடிக்கையினால் அதிருப்தியடைந்த வைத்தியர்களின் நியாயத்தை புரிந்து, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலையீடு செய்ததையடுத்து, நிலவரம் சுமுகமாகியுள்ளது.

முன்னதாக, மாகாண கணக்காய்வு திணைக்களத்தினர் வேலணை பிரதேச வைத்தியசலைக்கு சென்று, அங்கு நடந்து கொண்ட விதம் வைத்தியர்களை அசௌகரியப்படுத்தியிருந்தது.

அந்த வைத்தியசாலையில் 4 வைத்தியர்கள் கடமையிலிருக்க வேண்டியிருந்த போதும், 2 வைத்தியர்கள் மாத்திரமே பணியாற்றுகிறார்கள். அவர்கள் இருவரின் அர்ப்பணிப்பான சேவையினால், வைத்தியசாலை 24 மணித்தியாலங்களும் இயங்கி வருகிறது.

எனினும், சுகாதாரத்துறைக்குள் உள்ள ஆளணி வெற்றிடத்தால் வைத்தியசாலைகள் இயங்கும் விதத்தை மாகாண கணக்காய்வு திணைக்களத்தினர் சரியாக புரிந்து கொள்ளாமல்ஈ வேலணை வைத்தியசாலையில் நடந்து கொண்ட விதம்- தம்மை குறைமதிப்பிற்குட்படுத்துவதாக வைத்தியர்கள் உணர்ந்ததால்- அரச ஊழியர்களின் கடமைநேரத்திற்கு இணங்க மாத்திரமே பணியாற்றுவதென தீர்மானித்திருந்தனர்.

இதனால் வேலணை பிரதேச வைத்தியசாலையின் 24 மணித்தியால சேவை முடங்கும் அபாயமேற்பட்டது. இது தொடர்பில் முழுமையாக அறிந்து கொள்ள|வேலணை மக்களுக்கு அதிர்ச்சிச் செய்தி: 24 மணித்தியால மருத்துவ சேவை தடைப்படும் அபாயம்!

இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, வேலணை பிரதேச வைத்தியசாலையில் சேவை நேரம் குறையும் அபாயம் பற்றிய குறிப்பை காட்சிப்படுத்தியது தொடர்பில் அந்த வைத்தியசாலையின் 2 வைத்தியர்களும் விளக்கமளிக்க வேண்டுமென மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டது. மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த அறிவித்தலை விலக்கிக் கொள்ளாவிட்டால், மாகாணம் தழுவிய பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்திருந்தது.

இலங்கை முழுவதும் சுமார் 100 பிரதேச வைத்தியசாலைகளில் 2 வைத்தியர்கள் மாத்திரம் கடமையிலிருந்து, 24 மணித்தியால சேவையை வழங்குகிறார்கள். அங்குள்ள 2 வைத்தியர்களும் தமக்கிடையிலான புரிந்துணர்வின் அடிப்படையில் கடமை நேரத்தை பிரித்துக் கொள்கிறார்கள். வடக்கில் சுமார் 30 வைத்தியசாலைகள் அளவில் இப்படி இயங்குகின்றன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பிரதேச வைத்தியசாலைகள் இப்படி இயங்குகின்றன. வேலணை பிரதேச வைத்தியசாலை இவற்றில் ஒன்று. மருதங்கேணி, நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, புங்குடுதீவு ஆகிய பிரதேச வைத்தியசாலைகளிலும் 2 வைத்தியர்களே கடமையாற்றுகிறார்கள். வேலணை பிரதேச வைத்தியசாலையில் நிரந்தர தாதியும் இல்லை.

இந்த பின்னணியை அறியாத கணக்காய்வு திணைக்களத்தினர், வழக்கமான வைத்தியசாலைகளை போல, வேலணையும் இயங்க வேண்டும்- வைத்தியர்களும் கடமையாற்ற வேண்டுமென நினைத்திருந்தனர்.

வைத்தியர்கள் பற்றாக்குறையில் வைத்தியசாலைகள் இயங்கும் விதத்தை, கணக்காய்வு திணைக்களத்தினருக்கு விளங்கப்படுத்தியிருக்க வேண்டிய மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளரும் அதனை செய்யவில்லை.

இந்த சர்ச்சைப் பின்னணியில் நேற்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்குமிடையில் கலந்துரையால் நடந்தது. இதில் 3 தீர்மானங்கள் எட்டப்பட்டன.

1.வைத்தியசாலை ஆளணி பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் வரை, வைத்தியசாலைகள் தற்போது இயங்கும் விதத்திலேயே இயங்கும். கணக்காய்வு திணைக்களம் தொடர்பான விவகாரங்களை, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரே கையாள்வார்.

2.வேலணை பிரதேசவைத்தியசாலையில் கணக்காய்வு திணைக்களம் வந்ததன் பின்னர் உருவான நிலைமையை, சுகாதார சேவைகள் பணிப்பாளரே நேரடியாக தீர்த்துக் கொள்வார்.

3.வேலணை வைத்தியசாலையின் 2 வைத்தியர்களிற்கும், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரால் அனுப்பப்பட்ட விளக்கம் கோரும் கடிதத்தை கைவிடுவது என்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இதனால், ஆளணி பற்றாக்குறையில் 2 வைத்தியர்களுடன் இயங்கும் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் 24 மணித்தியால சேவை வழங்கப்படும். வேலணை வைத்தியசாலையிலும் தொடர்ந்தும் 24 மணித்தியால சேவை வழங்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்