27.6 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

கழுத்துக்குள் பாய்ந்த தடி அகற்றப்பட்டது: வவுனியா வைத்தியசாலையில் வெற்றிகரமான அறுவை சிகிச்சை!

கழுத்தில் மருத்தடி குத்தி ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட நபரின் கழுத்தில் இருந்த மரத்தடியை அகற்றி உயிர்காக்கும் சத்திரசிகிச்சையை வவுனியா வைத்தியசாலை மேற்கொண்டுள்ளது.

வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த போது தவறி விழுந்தபோது, அவரது கழுத்தில் மரத்தடி ஏறியது. நேற்று (25) இந்த சம்பவம் நடந்தது.

உயிராபத்தான நிலையில் அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அறுவை சிகிச்சை நிபுணர் ரஜீவ் நிர்மலசிங்கம் மற்றும் மயக்க மருந்து நிபுணர்  நாகேஸ்வரன் தலைமையிலான மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் குழு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.

வெற்றிகரமான அறுவை சிகிச்சையில் கழுத்தில் பாய்ந்திருந்த தடி அகற்றப்பட்டு, அந்த நபரின் உயிர் காப்பாற்றப்பட்டது.

நோயாளி தற்போது சீரான நிலையில் உள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முடிவுகளை அரசாங்கம் மேற்கொள்ளும் – அநுர

east tamil

யாழில் 13 இந்திய மீனவர்கள் கைது – கடற்படையின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயம்

east tamil

அரிசி விற்பனையில் கலப்பு!

east tamil

மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

பணிப்பகிஷ்கரிப்பில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

east tamil

Leave a Comment