கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படையின் மருத்துவ கப்பல்

Date:

நேற்றைய தினம் (21) ஆர்க் பீஸ் எனப்படும் சீன கடற்படையின் மருத்துவ கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கை மக்களுக்கு வைத்திய பரிசோதனை மற்றும் சிகிச்சை சேவைகளை வழங்குவதற்காக 22 முதல் 27ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலின் உத்தியோகப்பூர்வ விஜயத்தை முன்னிட்டு இலங்கை கடற்படை, மரபு ரீதியில் வரவேற்பு அளித்துள்ளது.

ஆர்க் பீஸ் கப்பலின் ஊடான மருத்துவ சேவைகளில் இலங்கை கடற்படையின் மருத்துவத் துறையினரும் இணைந்து மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருத்துவ கிளினிக்களை வழங்கவுள்ளதோடு, இதன்போது இரு நாட்டு கடற்படையினருக்கும் இடையிலான நட்புறவு, கடற்படை, கடல்சார் பீடம் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீடத்தில் அதிகாரிகள் பயிற்சி உட்பட இலங்கை கடற்படை வீரர்களுக்கு கப்பலின் செயல்பாட்டு செயல்திறன் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன.

மேலும், குறித்த கப்பல் எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பிலிருந்து புறப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்