யாழில் பேருந்து மோதி ஒருவர் பலி

Date:

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 11.30 மணியளவில் வீதியோரத்தில் இருந்த இருவர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த 76 வயதான நபரும் அவரது மகனும் விபத்தில் படுகாயமடைந்தனர்.

பின்னர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மகன் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.

பேருந்தின் சாரதி தப்பியோடியுள்ள நிலையில், இளவாலை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27)...

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்று வாய் கடற்பகுதி கடற்பரப்பில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து கொண்டுள்ளது

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்று வாய் பகுதிக்கு நேராகக் காணப்படும் கரை நிலமட்டம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்