18 இந்திய மீனவர்கள் கைது!

Date:

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த மீன்பிடி படகு சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்துள்ளது. அவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதைக் கண்டறிந்த இலங்கை கடற்படையினர் 18 இந்திய மீனவர்களுடன் 01 இந்திய மீன்பிடி படகு கைப்பற்றியுள்ளனர்.

இந்திய மீனவர்களுடன் கைப்பற்றப்பட்ட படகு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, சட்ட நடவடிக்கைக்காக இலங்கை கடலோர காவல்படை வடக்கு பிராந்திய பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்