குறிப்பிட்ட சில வகை மருந்துகளின் பற்றாக்குறையை அடுத்த சில நாட்களுக்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார்.
உயர்தர மருந்துகளை தொடர்ச்சியாக வழங்குவதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்சுலின், சோடியம் பைகார்பனேட், கார்போபிளாட்டின் மற்றும் இரினோடெகன் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையில் திறமையின்மை உள்ளது. சில நிறுவனங்களில் சில அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற பிரச்னைகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்,” என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1