இன்று மாலை புயல் உருவாகிறது!

Date:

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் இன்று (27) மாலை 4 மணியளவில் புயலாக மாற்றம் பெறும் என, யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியல்துறை விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரது பேஸ்புக் பதிவு வருமாறு-

27.11.2024 புதன்கிழமை மதியம் 2.00 மணி

கடந்து கடந்த 23. 11 .2024 அன்று வங்காள விரிகுடாவில் தோற்றம் பெற்ற காற்றழுத்த தாழ்வு நிலை தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக திருகோணமலையின் இறக்கண்டிக்கு கிழக்காக 80 கிலோ மீட்டர் தூரத்தில் அதன் மையம் அமைவு பெற்றுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை 4.00 மணியளவில் புயலாக மாற்றம் பெறும்.

வழமையாக வடகீழ் பருவக்காற்று காலங்களில் வங்காள விரிகுடாவில் தோன்றும் தாழமுக்கம் மற்றும் புயல்களின் நகர்வுப்பாதையை ஒரளவு தெளிவாக கணிக்க முடியும்.
ஆனால் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வுப்பாதையை தெளிவாக கணிக்க முடியவில்லை. அத்தோடு இதன் கரையைக் கடக்கும் இடம் இன்னமும் தெளிவாகவில்லை.

தற்போதைய நிலையின் படி இந்த புயல் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 30ம் திகதியளவில் சென்னைக்கும் கடலூருக்குமிடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நகரும் பாதையும் கரையைக் கடக்கும் இடமும் மாற்றமடையலாம் என்பதனைக் கருத்தில் கொள்க.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கிழக்கு மாகாணத்தின் திருகோணமலைக்கும் வடக்கு மாகாணத்தினுடைய அனைத்து மாவட்டங்களுக்கும் தற்போது கிடைத்து வருகின்ற மழை நாளை வரை தொடர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆனால் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு சற்று வேகமான காற்றுடன் மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறையை பொருத்தவரை இன்று முதல் மழை படிப்படியாக குறைபடையும் ஆனாலும் எதிர்வரும் 30.11.2024 வரை இடை இடையிடையே கனமழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன

தொடர்ச்சியாக கிடைத்த வருகின்ற கனமழை காரணமாகவும் குளங்களினுடைய மேலதிகமான உபரி நீர் வான் பாய்வதன் காரணமாகவும் வடக்கு (அனைத்து மாவட்டங்களும்) மற்றும் கிழக்கு மாகாணங்களின் உடைய பல பகுதிகளிலும் (முக்கியமாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை) வெள்ள அர்த்தத்துக்கான வாய்ப்புகள் மிக உயர்வாகவே காணப்படுகின்றன.

spot_imgspot_img

More like this
Related

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...

நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்

வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த மின்சாரத் தேவை மற்றும் அதிக சூரிய மின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்