கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று மதவாச்சி, பூனாவ, மஹா கும்பகொல்லேவ பகுதியில் வீதியில் கவிழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
அதிக வேகம் காரணமாக பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததாக பூனாவ பொலிசார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், உயிரிழந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.





