நடாளுமன்ற முதல் அமர்விலேயே அர்ச்சுனாவின் தற்குறித்தனம் ஆரம்பம்!

Date:

நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகிய வைத்தியர் அர்ச்சுனா, முதலாவது நாடாளுமன்ற அமர்வலேயே தனது தற்குறித்தனத்தால் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

தற்குறித்தனங்களால் மட்டுமே பிரபலமடைந்து, நாடாளுமன்ற உறுப்பினராகிய அர்ச்சுனா, இன்றைய முதல் நாள் அமர்வில், எதிர்க்கட்சி தலைவர் உட்காரும் ஆசனத்தில் உட்கார்ந்துள்ளார்.

நாடாளுமன்ற முதல்நாள் அமர்வில், உறுப்பினர்கள் விரும்பிய ஆசனங்களில் உட்காரலாமென்ற போதும், நாடாளுமன்ற சம்பிரதாயத்தின்படி, இடதுபுறம் முதலாவது ஆசனத்தில் எதிர்க்கட்சி கொறடாவும், இரண்டாவது ஆசனத்தில் எதிர்க்கட்சி தலைவர் உட்கார்வதும் சம்பிரதாயம்.

எனினும், அர்ச்சுனா எதிர்க்கட்சி தலைவரின் ஆசனத்தில் உட்கார்ந்துள்ளார். இது குறித்து பாராளுமன்ற பணியாளர்கள் விளக்கமளித்த போதும், தற்குறித்தனத்துடன் பதிலளித்தார்.

அத்துடன், இந்த சம்பவத்தை நேரலையில் தெரிவித்து விட்டு, தமிழன்டா என்றும் உளறிக் கொட்டியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கவிஞர் சேரன் காலமானார்

கவிஞர், பேராசிரியர் சேரன் நேற்று (18) கனடாவில் காலமானார். அளவெட்டியை பிறப்பிடமாக கொண்ட...

கடத்திக் கொன்றவரை புதைத்து, அதன் மேல் வாழை மரம் நட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் 8 பேருக்கு மரணதண்டனை!

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவரை கடத்திக் கொலை செய்த...

டிட்வா புயலால் சுமார் ஓராண்டாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் மீண்டும் நகர்வு!

டிட்வா (Ditwah) புயலால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளினால், கம்பளை – உலப்பனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்