கவிஞர், பேராசிரியர் சேரன் நேற்று (18) கனடாவில் காலமானார்.
அளவெட்டியை பிறப்பிடமாக கொண்ட கவிஞர் சேரன், நீண்டகாலமாக கனடாவில் வசித்து, பேராசிரியராக பணியாற்றியவர்.
ஈழத்து நவீன கவிதை முன்னோடிகளில் ஒருவரான மகாகவி உருத்திரமூர்த்தியின் மகனான சேரனும், ஈழத்தமிழ் கவிதை உலகில் தவிர்க்க முடியாத அடையாளமாக திகழ்ந்தவர்.
ஆயுதப் போராட்டங்களின் ஆரம்ப காலகட்டத்தில் தீவிரமாக கவிதைகள் எழுதிய சேரன், தமிழ் மக்களின் பல்வேறு பாடுகளையும் தன் கவிதைகளில் வெளிப்படுத்தியிருந்தார்.




