கடுவெல மின்சாதன விற்பனை நிலையத்தில் பயங்கர தீ விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!

Date:

இலங்கையின் கடுவெல நகரில் அமைந்துள்ள மின்சார மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (19) அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், தலஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நாரத சதருவன், அவரது 28 வயதுடைய மனைவி நிலக்ஷா மதுஷானி ராஜபக்ஷ மற்றும் அவர்களது மூன்று வயதுடைய இரட்டை மகள்களான ஒனலி ராஜபக்ஷ, தினலி ராஜபக்ஷ ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

குறித்த மின்சாதன விற்பனை நிலையம் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமானது எனவும், உயிரிழந்த தம்பதியினர் அங்கு பணியாற்றி வந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், அவர்கள் தங்களது இரு குழந்தைகளுடன் குறித்த விற்பனை நிலையத்தின் மேல் மாடியில் தங்கியிருந்துள்ளனர்.

இன்று அதிகாலை 6.05 மணியளவில் குறித்த விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கடுவெல பொலிஸாருக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், குறித்த அனர்த்தத்தைக் கண்டறிந்துள்ளனர்.

இரண்டு மாடிகளைக் கொண்ட அந்தக் கட்டிடத்தில் காற்றோட்டத்திற்கான ஜன்னல்கள் எதுவும் இல்லாததால், கீழ் மாடியில் ஏற்பட்ட தீயினால் உருவான புகை மேல் மாடிக்குச் சென்றுள்ளது.

இதன் காரணமாக, உறக்கத்திலிருந்த நால்வரும் புகையைச் சுவாசித்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தீயைக் கட்டுப்படுத்த கோட்டே மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவைச் சேர்ந்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, நீண்ட போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் மற்றும் குற்றத்தடயவியல் விசாரணைப் பிரிவு அதிகாரிகளை அழைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இன்று பல பகுதிகளிலும் மழை

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது...

இலங்கையிலா இப்படி?: அதிர வைக்கும் புள்ளிவிபரம்

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டில் பதின்ம வயதினர் கர்ப்பமடைந்த...

கனடாவிற்கு கப்பலில் புறப்பட்ட இலங்கைத்தமிழர் அனாதையாய் ஆபிரிக்காவில் உயிரிழந்த சோகக்கதை!

பாதுகாப்பைத் தேடி இந்தியாவிலிருந்து கனடாவுக்குப் புறப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவரின் நீண்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்