26.8 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இலங்கை

தற்கொலை செய்தவரில் எல்லாப்பழியையும் போட்டு தப்பிக்க முனையும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்!

மிரிஹானவில் உள்ள ரத்வத்தையின் மனைவியின் வீட்டுத் தரிப்பிடத்தில் காணப்பட்ட இலக்கத் தகடுகள் இல்லாத கார் தொடர்பில் தனக்கும் தனது மனைவிக்கும் எதுவும் தெரியாது என பொலிஸாரின் விசாரணையின் போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, மிரிஹான, ஷாலாவ வீதியில் அமைந்துள்ள ரத்வத்தையின் மனைவிக்கு சொந்தமான வீட்டின் வாகனத் தரிப்பிடத்தில் இலக்கத் தகடுகள் இல்லாத காரை அதிகாரிகள் குழுவினர் சனிக்கிழமை கண்டெடுத்துள்ளனர். வாகனத்தை கண்டெடுத்ததன் பின்னர் வீடு ரத்வத்தையின் மனைவிக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது முன்னாள் ஒருங்கிணைப்பு செயலாளர் தனக்கு தெரிவிக்காமல் இந்த காரை இங்கு கொண்டு வந்ததாக மிரிஹான பொலிஸாரிடம் ரத்வத்தை தெரிவித்துள்ளார். இந்த கார் யாருடையது என்பது எனக்கு தெரியாது என ரத்வத்தை தெரிவித்துள்ளார்.

ரத்வத்தை தனது மனைவியின் வீட்டிற்கு காரைக் கொண்டு வந்ததாகக் கூறும் செயலாளர், அண்மையில் கண்டியில் தற்கொலை செய்துகொண்டார்.

கண்டி ரத்வத்தைக்கு சொந்தமான அலுவலகம் ஒன்றில் வைத்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரின் சாவி காணாமல் போனதால், போலீசார் நீதிமன்றத்தில் உண்மைகளை தெரிவித்து, பூட்டை உடைத்து வாகனத்தை சோதனையிட உத்தரவிடுவார்கள் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரத்வத்தயோ அல்லது அவரது மனைவியோ அல்லது வேறு எந்த தரப்பினரும் இதுவரை இந்த காரை உரிமை கோராததால், வாகனம் கார் கேரியர் டிரக்கில் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த காரின் பூட்டை உடைத்து, அரச பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கார் பரிசோதகர்கள் ஆகியோரின் உதவியுடன் விசாரணை நடத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இரு பேருந்துகள் மோதி விபத்து: 35 பேர் காயம்!

Pagetamil

மன்னார் துப்பாக்கிச்சூடு: முன்னாள் இராணுவச்சிப்பாய்கள் இருவர் சந்தேகத்தில் கைது!

Pagetamil

அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை காக்க நன்கொடை கோரும் பெற்றோர்

east tamil

யாழ் நகைக்கடை கொள்ளை: இரணுவப் புலனாய்வளர்கள், காப்புறுதி நிறுவன முகாமையாளர்கள் கைது!

Pagetamil

இன்றைய வானிலை அறிக்கை

east tamil

Leave a Comment