தற்கொலை செய்தவரில் எல்லாப்பழியையும் போட்டு தப்பிக்க முனையும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்!

Date:

மிரிஹானவில் உள்ள ரத்வத்தையின் மனைவியின் வீட்டுத் தரிப்பிடத்தில் காணப்பட்ட இலக்கத் தகடுகள் இல்லாத கார் தொடர்பில் தனக்கும் தனது மனைவிக்கும் எதுவும் தெரியாது என பொலிஸாரின் விசாரணையின் போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, மிரிஹான, ஷாலாவ வீதியில் அமைந்துள்ள ரத்வத்தையின் மனைவிக்கு சொந்தமான வீட்டின் வாகனத் தரிப்பிடத்தில் இலக்கத் தகடுகள் இல்லாத காரை அதிகாரிகள் குழுவினர் சனிக்கிழமை கண்டெடுத்துள்ளனர். வாகனத்தை கண்டெடுத்ததன் பின்னர் வீடு ரத்வத்தையின் மனைவிக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது முன்னாள் ஒருங்கிணைப்பு செயலாளர் தனக்கு தெரிவிக்காமல் இந்த காரை இங்கு கொண்டு வந்ததாக மிரிஹான பொலிஸாரிடம் ரத்வத்தை தெரிவித்துள்ளார். இந்த கார் யாருடையது என்பது எனக்கு தெரியாது என ரத்வத்தை தெரிவித்துள்ளார்.

ரத்வத்தை தனது மனைவியின் வீட்டிற்கு காரைக் கொண்டு வந்ததாகக் கூறும் செயலாளர், அண்மையில் கண்டியில் தற்கொலை செய்துகொண்டார்.

கண்டி ரத்வத்தைக்கு சொந்தமான அலுவலகம் ஒன்றில் வைத்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரின் சாவி காணாமல் போனதால், போலீசார் நீதிமன்றத்தில் உண்மைகளை தெரிவித்து, பூட்டை உடைத்து வாகனத்தை சோதனையிட உத்தரவிடுவார்கள் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரத்வத்தயோ அல்லது அவரது மனைவியோ அல்லது வேறு எந்த தரப்பினரும் இதுவரை இந்த காரை உரிமை கோராததால், வாகனம் கார் கேரியர் டிரக்கில் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த காரின் பூட்டை உடைத்து, அரச பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கார் பரிசோதகர்கள் ஆகியோரின் உதவியுடன் விசாரணை நடத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் ஆட்சியாளர் பஷார் அல்-அசாத்திற்கு மரணதண்டனை விதித்தது சிரிய நீதிமன்றம்

சிரியாவின் கிட்டத்தட்ட 14 ஆண்டுகால உள்நாட்டுப் போரின்போது இழைக்கப்பட்ட அட்டூழியங்களுக்காக, முன்னாள்...

யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் போராட்டம்

யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் மற்றும் பிற அரசாங்க...

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாநாடு!

பெண்களின் மேம்பாட்டையும், அரசியல் செயல்முறைகளில் அவர்களின் அர்த்தமுள்ள பங்கேற்பையும் ஊக்குவிக்கும் வகையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்